கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ,பர்கூர் ஒன்றியம்,குழந்தைநேய பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.30.45 இலட்சம் மதிப்பீட்டில் குண்டியால்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கூடுதல் வகுப்பறை கொண்ட கட்டிடம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் குண்டியால்நத்தம் புதிய அங்கன்வாடி மைய கட்டிட திறப்புவிழா, கிராம சாலைகள் மேம்பாட்டுத் 2024-2025 திட்டத்தின் கீழ் ரூ.40.08 இலட்சம் மதிப்பீட்டில் ஒப்பதவாடி சாலை முதல் பாரதகோயில் வரை தார்சாலை, ரூ.34.92 இலட்சம் மதிப்பீட்டில் புதுரோடு தேசிய நெடுஞ்சாலை முதல் நெல்லிகான் வட்டம் வரை தார்சாலை மற்றும் ரூ.09.85 இலட்சம் மதிப்பீட்டில் குண்டியால்நத்தம் தேசிய நெடுஞ்சாலை முதல் ஜெயராமன் வட்டம் வரை தார்சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு.தே.மதியழகன்.,MLA,அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி இனிப்புகளை வழங்கி பூமி பூஜை மற்றும் திறப்புவிழாவினை துவக்கி வைத்தார்.
உடன் அரசு அதிகாரிகள் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,அனைத்து அணிகளின் தலைவர்கள்,துணை தலைவர்கள் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை கழக செயலாளர், வாக்கு சாவடி முகவர்கள், கழகத் தோழர்கள், வட்ட செயலாளர்கள், வட்ட பிரதநிதிகள்,வார்டு உறுப்பினர்கள்,ஊர் பொதுமக்கள் என அனைவரும் பூமி பூஜை மற்றும் திறப்புவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்...