வேலூர், முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியின் கணிதத்துறை பேராசிரியர் முனைவர். பி.முரளிகிருஷ்ணாவுக்கு , சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கருத்தரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் சிறந்த ஒருங்கிணைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு கல்லூரியில் நடைபெற்ற ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் கல்லூரி முதல்வர் முனைவர். சு.ஸ்ரீதரன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
