வேலூர் மாவட்டம் ,வெட்டுவானம் அருள்மிகு எல்லையம்மன் கோயிலில் ஆடி 5ம் வெள்ளியை முன்னிட்டு காலை 10 மணி அளவில் திருக்கோவிலுக்கு வருகை புரிந்தார் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு. பாபு. இதையடுத்து அவர் எல்லையம்மனை தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து நடந்த கோ பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவருக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது கோயில் செயல் அலுவலர் நடராஜன் மற்றும் திமுக மாவட்ட பிரதிநிதி புகழேந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
வேலூர்: வெட்டுவானம் எல்லையம்மன் கோயிலில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாமி தரிசனம்!
8/16/2024
0
