திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தொல் திருமாவளவளின் பிறந்தநாள் விழா ஒட்டி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. பின்னர் அரசு மருத்துவமனையில் உள்ள 100 நோயாளிகளுக்கு பிரட், பழம் வழங்கப்பட்டது. பின்னர் மதியம் 12 மணியளவில் மாங்கால் கூட்ரோடு ரூரல் எய்ட் ஐக்கிய வளமனையில் உள்ள 70 குழந்தைகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தி கல்வி உபகரணங்கள் மற்றும் உணவு வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மேனாள் மாவட்ட செயலாளர் ம.கு.பாஸ்கர்(எ)பகலவன் மற்றும் கட்சியின் தொகுதி செயலாளர் குப்பன் என்கிற வெற்றிவளவன் மற்றும் அரசு ஊழியர் அய்க்கியப் பேரவையின் மாநில துணைச் செயலாளர் ஏ.மாரிமுத்து, ஒன்றிய செயலாளர்கள் ஆ.பெ.அம்பேத்கர், ஆ.நாகாவளவன், ம.காளிமுத்து, சி.ஞானசேகரன், மு.சத்தியமூர்த்தி, மோ.சுதாகர், மாவட்ட நிர்வாகிகள் த.மேனகா சா.எரோமியத்தானியில், மோ.ரஞ்சித்குமார், க.ராமு, மு.தணிகாவளவன், தினகரன் க.அருள் தாஸ் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். படபடக்கம் செய்யாறு அடுத்த மாங்கால் கூட்ரோடில் உள்ள ரூரல் எய்ட் ஐக்கிய வளமனையில் விசிக தலைவர் தொல் திருமாவளவனின் பிறந்தநாளை ஒட்டி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்கள் நேற்று வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை:செய்யாறில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
8/17/2024
0
