ஆயத்த ஆடைகள், வீட்டு அலங்கார பொருட்கள், துணி வைககள், அரிதான நகைகள்.கோயம்புத்துாரில், கிராப்ட் கவுன்சில் ஆப் தமிழ்நாடு நடத்தும் கைவினை பொருள் கண்காட்சி அவிநாசி ரோட்டில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் இன்று (2024 செப்டம்பர் 19) முதல் 21 வரை மூன்று நாட்களுக்கு நடக்கிறது. இ கண்காட்சி காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை இது நடக்கிறது. தன்னார்வ தொண்டு நிறுவனமான தமிழ்நாடு கிராப்ட் கவுன்சில், 37 ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது.தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்கள், கலைஞர்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றி வருகிறது. உலக கிராப்ட்ஸ் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற, சென்னையில் உள்ள இந்திய கிராப்ட் கவுன்சில் அங்கீகாரத்தையும் இது பெற்றுள்ளது.தமிழ்நாடு கிராப்ட் கவுன்சிலின் செயற்குழு மற்றும் உறுப்பினர்களின் தனித்துவமிக்க கண்காட்சியாக சிருஷ்டி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக புகழ்மிக்கதாக இது திகழ்ந்து வருகிறது.கண்காட்சியில், கைவினைஞர்களும், கலைஞர்களும்,நெசவாளர்களும் உருவாக்கிய பொருட்கள் இடம் பெறுகின்றன. உள்நாட்டில் தயாரான கைவினைஞர்கள் திருவிழாவாகஇதுநடக்கிறது.
ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என அனைவருக்குமான ஆயத்த ஆடைகள், வீட்டு அலங்கார பொருட்கள், துணி வைககள், அரிதான நகைகள் போன்றவை பங்களிக்கின்றன. வாங்கி மகிழ 68 வகையான பொருட்கள் இடம் பெறுவதோடு, அறுசுவை உணவுக்கும் 6 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.கோவை மக்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகம்ஆவலோடுஎதிர்பார்க்கும் சிருஷ், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதும் கைவினைஞர்களின் நிதி வாழ்வாதரமாக இந்த விழா நடக்கிறது. இதில் கிடைக்கும் நிதியானது,கைவினைஞர்களின் மானியத்துக்கும், ஆண்டுக்கு ஒரு முறை கிராப்ட் கண்காட்சி நடத்தவும்பயன்படுத்தப்படுகிறதுசிருஷ்டியில் ஒவ்வொரு கடையும் ஒரு நல்ல காரணத்துக்காக அமைந்துள்ளது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். வாடிக்கையாளர்கள், பார்வையாளர்கள் தங்களது சொந்த பைகளை எடுத்து வரவும், ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளை தவிர்க்கவும் தமிழ்நாடு கிராப்ட் கவுன்சில் வேண்டுகிறது.
