கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், பேரண்டப்பள்ளி, மாரசந்திரம், ஆலுர், முத்தாலி, பாத்தமுத்தாலி,காருப்பள்ளி மல்லசந்திரம் பகுதிகளில் என்.எச். 948 A சேட்டிலைட் ரிங் ரோடு ( பெங்களுர் இணைப்பு சாலை) மேம்பாலம் மற்றும் சாலை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் சாலை பணிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னதாக பேரண்டப்பள்ளியில் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் பட்டர்பிளை மேம்பால பணிகளை பார்வையிட்டு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் சாலை பணிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 100 குடியிருப்பு மக்கள் பயன்பெறும் வகையில் மோரனப்பள்ளி வரை கிராமம் வரை சாலை அகலப்படுத்தி தார் சாலை அமைத்து தர கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து மாரசந்திரம் கிராமத்தில் தார்சாலை அமைக்கவும், ஆலுர் பகுதியில், இணைப்பு சாலை அமைக்கவும், (service Road), சிறு மேம்பாலம் அமைக்கவும், பாத்த முத்தாலியில் தற்போது அமைக்கப்பட்டு வரும் சிறு மேம்பாலத்தையொட்டி 100 குடியிருப்புகள் பயன் பெறும் வகையில் இணைப்பு சாலை அமைக்கவும், காருப்பள்ளியில் இணைப்பு சாலை அமைக்கவும், அட்டூர் படுதேப்பள்ளியில் இணைப்பு சாலை மற்றும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தார். வருவாய்த்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் சாத்திய கூறுகள் உள்ள நிலையில் பொதுமக்கள் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ,ப. அவர்கள் தெரிவித்தார்.
இவ்வாய்வின் போது தனி வருவாய் அலுவலர் (நில எடுப்பு) திருமதி.பவநந்தி, தனி வட்டாட்சியர்கள் திருமதி.காமாட்சி, திரு.மோகன், திரு.அருள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
