வேலூர் :சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஆலோசனை.
9/12/2024
0
சிறு தொழில் வளர்ச்சி வங்கியின் (sidbi) கிளையை வேலூரில் தொடங்குவது குறித்து கருத்தரங்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப. அவர்கள் வேலூர் தி ராயல் கிராண்ட் ஹோட்டலில் தொடங்கி வைத்து ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் Sidbi வங்கியின் முதன்மை பொது மேலாளர் திரு. சஞ்சய் குப்தா, பொது மேலாளர் திரு. பி. பிரவீன் குமார், வேலூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு. ரமணி, ராணிப்பேட்டை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு. ஆனந்தன் மற்றும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சார்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
