விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நகரின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கின்றன.இந்நிலையில் பூ மார்க்கெட் பகுதியில்
விறு விறுப்பான வியாபாரம் நடைபெற்று வருகின்றது.செவ்வந்தி,மல்லி, சம்மங்கி,அரளி என பல்வேறு பூக்களின் விலையும், வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.
ஓணம், விநாயகர் சதுர்த்தி என அடுத்தடுத்து விஷேசநாட்கள் வருவதால், விலை அதிகமாக இருப்பதாகவும்,
கோவை பூ மார்க்கெட்டில் மல்லிகைபபூ கிலோ 800 ரூபாய்,தாமரை ஒன்று 30 ரூபாய்,முல்லை கிலோ 500 ரூபாய்,செவந்தி கிலோ 200 ரூபாய்,ரோஸ் கிலோ 250 ரூபாய் என விலை போவதாகவும் இது வழக்கத்தை விட சற்று அதிகம்தான் எனவும் பூ மார்கெட் வியாபாரிகள் தெரிவிகத்தனர்.சென்டு மல்லி,வாடாமல்லி வரத்து அதிகம் என்பதால் அந்த பூ மட்டும் கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் விலை போவதாகவும்,
இரு வாரமாக சென்டு மல்லி விலை குறைந்து இருப்பதாகவும் பூ வியாபாரிகள்தெரிவித்தனர்.
ஆன்லைன் பூ வியாபாரம்அதிகமானதால்,லோகல் மார்க்கெட்டில் வியாபாரம் குறைவாகின்றது எனவும் பூ மார்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.

