இது குறித்துசெய்தியாளர்களிடம் பிஎஸ்ஜிஅன்ட்சன்ஸ்அறக்கட்டளையின்நிர்வாகஅறங்காவலர்கோபாலகிருஷ்ணன்,பி.எஸ்.ஜி. மேலாண்மை கல்லூரி இயக்குனர், முனைவர் ஸ்ரீவித்யா, பி.எஸ்.ஜி.கேர் இயக்குனர் முனைவர் ருத்ரமூர்த்தி ஆகியோர் பேசினர்..
சமூகத்தின் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் கடந்த 1995-ம் ஆண்டு இந்த இல்லத்தில் தற்போது 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருவதாகவும்,ஆதரவற்ற குழந்தைகளின் நலன் கருதி செயல்படும் இதில்,ஆரம்ப கல்வி முதல், பாலிடெக்னிக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி என பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களில் திறமையான மற்றும் தகுதியான மாணவர்களுக்கு உயர் கல்வி சேர்க்கை வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் மாணவர்களுடன் இணைந்து கோவையை சேர்ந்த பல்வேறு தன்னார்வஅமைப்பினர்,பி.எஸ்.ஜி.பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் உள்ளிட்ட ஏராளமான பேர் நட்பு மற்றும் கலாச்சார ஒற்றுமையுடன் கலந்து கொண்டது கூடியிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

