இதய அறுவை சிகிச்சையில் ரோபோடிக் சிகிச்சையுடன் தற்போது டி.ஏ.வி.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய இதய நோய் அறுவை சிகிச்சை நோயாளிகள் விரைவில் குணமடைய பயனுள்ளதாக இருப்பதாக அப்பாலோ மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.மருத்துவ துறையில் பல்வேறு சிகிச்சைகளுக்கான நவீன தொழில் நுட்பங்கள் தொடர்ந்து வேகமாக.வளர்ந்துவருகின்றனஇந்நிலையில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பெருநாடி ஸ்டெனோசிஸ் எனும் இருதயம் தொடர்பான வால்வுலர் நோயால் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள் பாதிக்கபடுகின்றனர்.
இந்நிலையில் இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களை வேகமாக சிகிச்சை செய்து குணப்படுத்தும் வகையில் புதிய தொழில் நுட்பம் குறித்து சென்னை இதய நோய் நிபுணர்கள் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இதில் மருத்துவர்கள் செங்கோட்டுவேலு,மற்றும் யூசுப் ஆகியோர் பேசினர்.
தற்போது நவீன தொழில் நுட்பமான ரோபோடிக் சிகிச்சையுடன் மிக நவீனமான புதுமையான டிஏவிஐ தொழில்நுட்பம் இணைந்து செய்யப்படும் சிகிச்சை நோயாளிகளுக்கு நல்ல பலனளிப்பதோடு விரைவில் குணமடைய வழிவகுப்பதாக தெரிவித்தனர்..குறிப்பாக பெருநாடி ஸ்டெனோசிஸ் அறிகுறிகளை கண்டறிந்தால் முன் கூட்டியே இந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் நோயாளிகளின் ஆயுளை அதிகரிப்பதாக நம்பிக்கை தெரிவித்தனர்.இந்த சிகிச்சை மூலமாக வயதானவர்களுக்கு இதய வால்வ் பிரச்சனையை ஏற்பட்டால் அவர்களை தொடை மூலமாக ஊசி செலுத்தி அதனை சரி செய்ய முடியும் என தெரிவித்தனர் ரோபோடிக் மற்றும் டிஏவிஐ தொழில்நுட்பம் மூலமாக நோயாளிக்கு எந்த விதமான சிகிச்சை அளிக்க முடியும் என்று ஆராய்ச்சி செய்த பிறகு சிகிச்சை அளிக்கப்படும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த நபர்களுக்கு கூட இந்த சிகிச்சை செய்ய முடியும் சிகிச்சை செய்து அடுத்த நாட்களே சாதரணமாக செயல்படுவார்கள் என்று கூறினர்.இதய நோய் சிகிச்சையில் அப்போலோ மருத்துவமனை தொடர்ந்து புதிய சிகிச்சை முறைகளை மேற்கொள்வதாகவும்,குறிப்பாக தற்போது இந்த புதிய தொழில் நுட்பம் இதய அறுவை சிகிச்சையில் மேலும் ஒரு மைல் கல்லை எட்டியுள்ளதாக தெரிவித்தனர்.

