இதன் ஒரு பகுதியாக துரித உணவு வகைளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிளத்தான் நடைபெற்றது.
எம்.எம்.கிச்சன் என்ஜினியரிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஏ.எம்.எல்.நலன் மகேந்திரன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதற்கான துவக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வெண்ணிலா ஹோமியோ கிளினிக் டாக்டர் இளங்கோவன்,மேக்னம் கார்பன் சொல்யூஷன்ஸ் சிவா பழனிசாமி,எஸ்.பி.பி.சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன்,ஸ்ரீ வி.கே.எஸ்.ஹோம்ஸ் நிறுவன பங்குதாரர் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சைக்கிளத்தானை துவக்கி வைத்தனர். துரித வகை உணவுகளால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில், பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வமுடன் சைக்கிள் ஓட்டி சென்றனர்.துரித உணவை உண்பதின் மூலம் உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற வளர்சிதை மாற்றங்கள் ஏற்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி சைக்கிளில் சென்றனர்.முப்பது கிலோ மீட்டர் தூரமாக நடைபெற்ற இந்த சைக்கிளிங் நிகழ்வு நல்லாம்பாளையத்தில் துவங்கி கவுண்டம்பாளையம் வழியாக ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு வந்து மீண்டும் நல்லாம்பாளையம் வந்தனர்..