கோவைபுதூர் வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற நவராத்திரி விழா கொலு பொம்மைகளாக வலம் வந்த மழலை குழந்தைகள்!!!

sen reporter
0


 கோவையில் நவராத்திரி பண்டிகையையொட்டி கோவைபுதூர் வித்யாஸ்ரம்  மழலையர் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலு பொம்மைகள் போல வேடமிட்டு அசத்தினர்.நவராத்திரி பண்டிகையின் போது வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபடுவது வழக்கம்.இந்நிலையில், கோவைபுதூர் பகுதியில் உள்ள வித்யாஸ்ரம்   மழலையர் பள்ளியில் நவராத்திரி விழா நடைபெற்றது.இதில் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன்,கவுரி தேவேந்திரன் மற்றும் நிர்வாகி உதயேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். வித்யாஸ்ரம் பள்ளியின்  நிர்வாக இயக்குனர் சவுந்தர்யா ஒருங்கிணைப்பில் நடைபெற்றவிழாவில்நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலு பொம்மைகள் போல் வேடமணிந்துஅசத்தினர். முன்னதாக தர்மர், அர்ச்சுனர், பழனி முருகர், மதுரை மீனாட்சி, கருமாரியம்மன் என தெய்வங்கள் வேடத்தை அணிய துவங்கிய குழந்தைகள், பள்ளியில் வைக்கப்பட்டிருந்த கொலு அலங்காரத்தில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மழலையர் பள்ளியில் பயிலும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் விழாவில்,கொழு பொம்மைகள் போல வேடமிட்டு காண்போரின் கவனத்தைஈர்த்தனர்.இதில், அஷ்டலட்சுமி, தசாவதாரம், அறுபடை வீடு, பஞ்ச பாண்டவர், அம்மன், சிவன், ராமர் என ஒவ்வொரு குழுவாக தெய்வங்கள் போல வேடமிட்ட குழந்தைகள் தத்ரூபமாக கொலு பொம்மைகள் போல அணிவகுத்து நின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top