கோவை:தமிழகத்தில் டெங்கு இல்லை - அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி!!!

sen reporter
0

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் தான் டெங்கு பாதிப்பால் அதிகம் பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். கோவை சிங்காநல்லூரில் 1.50 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நகர்புற சமுதாய நல கட்டிடம்,மற்றும் காணொளி வாயிலாக தாளியூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 58.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம்  உள்ளிட்டவையினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.இதனை அடுத்து சிங்காநல்லூரில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ,மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பயனடையும் நபர்களுக்கு மருந்து பெட்டகத்தை அமைச்சர் வழங்கினார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
தற்போது புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்கனவே இருக்கின்ற மருத்துவர்கள் செவிலியர்கள் போதுமானது. இதுவரை 946 மருந்தாளர்கள் 500-க்கும் மேற்பட்ட உதவியாளர்கள் மருத்துவமனைகளில் நியமிக்கப்பட்டுள்ளது.அதேபோல 2000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
செவிலியர்கள் மருத்துவர்கள் நிரப்பும் பணி தொடர்பாக நீதிமன்றத்தில் 38 வழக்குகள் போடப்பட்டுள்ளது. அந்த வழக்கில் நேற்றைய தினம் நீதிமன்ற தீர்ப்பின்படி 14 மருத்துவமனையில் கல்லூரி முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர்களை அழைத்து பேசும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் 1500 க்கும் மேற்பட்ட செவிலியர்களை நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது.அதேபோல ஒப்பந்த பணியில் பணி செய்யக்கூடிய செவிலியர்களை நிரந்தர செய்ய முடியாது அதற்கு எம்ஆர்பி தேர்வு எழுதுவார்கள் அவர்களை மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்படும்.நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் காய்ச்சல் உள்ளதா என மருத்துவ நடப்பாடும் வாகன மூலம் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மலைப்பொழிவு அதிகமானால் கிராமப்புற பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு முகாம் போடப்படும்.தமிழகத்தில் தற்போது எங்கும் டெங்கு பாதிப்பு இல்லை. 2017 இல் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 65 பேர் உயிரிழந்தனர். இந்த வருடத்தில் டெங்கு இறப்பு என்பது ஆறு பேர் தான். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் தான் டெங்குவால் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போது டெங்கு பாதிப்பு எங்கு உள்ளது என இபிஎஸ் காண்பிக்க வேண்டும் என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top