செங்கல்பட்டு:மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாமல்லபுரத்தி சங்கம் மற்று செல்வி துளசிமதி பாராட்டு விழா நடைபெற்றது!!!
11/16/2024
0
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், உலக சிறு விலங்குகள் கால்நடை மருத்துவ சங்கம் மற்றும் இந்தியாவின் சிறு விலங்கு பயிற்சியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் (FSAPAI) சார்பில் பாரா பேட்மிண்டன் வீராங்கனை செல்வி துளசிமதி முருகேசன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. க. செல்வம், சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.கருணாநிதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு.ஜெ.மேகநாதரெட்டி, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
