திருவண்ணாமலை மாவட்டம் காசப்பாக்கம் அடுத்த கீழ் பாலூர் கிராமத்தில் உழவர் திருவிழா!!!

sen reporter
0


 திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ் பாலூர் கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி விரிவாக்கம் விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த உழவர் விழா நேற்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கலசபாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் முருகன் வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தார்.  மேலும் உயிர் உரங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், மண்மாதிரி எடுத்தல், மண் பரிசோதனை அடிப்படையில் உரம் மேலாண்மை செய்தல் குறித்து  விளக்கினார்.

கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் அருளானந்தம் இலாபகரமான முறையில் கறவை மாடு வளர்ப்பு, கன்றுகள் பராமரிப்பு, தீவனம் மற்றும் தாதுப்பு வழங்குதல், கால்நடைகளை தாக்கும் நோய்களின் அறிகுறிகள்  மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார். சிறுதானிய மகத்துவ மையஉதவிபேராசிரியர் முனைவர். சரவணன் கலந்துகொண்டுசிறுதானியங்கள்  சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டு செய்து சந்தைப்படுத்துதல்  குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் சவுந்தர்   பசுந்தாள் உர பயிர் சாகுபடி மூலம் மண்வளம் பெருக செய்தல்,  பயிர் சுழற்சி முறையில் பயிர் சாகுபடி செய்தல் குறித்தும் நிலக்கடலை பயிரில் ஜிப்சம் இட்டு மண் அணைப்பதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் எனபதை  பற்றியும் விவசாயிகளுக்கு தெரிவித்தார். உதவி தோட்டக்கலை அலுவலர் ஆனந்தன்   நுண்ணீர் பாசனம் அமைத்து குறைந்த நீர் பாசனத்தில்  அதிக பரப்பளவு பயிர் சாகுபடி செய்து அதிக வருமானம் பெருதல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். 

இந்நிகழ்ச்சியில் அட்மா திட்ட வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் முருகன்,   கீழ்பாலூர்  ஒன்றிய கவுன்சிலர் தணிகைமலை  உள்ளிட்ட 100 மேற்பட்ட விவசாயிகள்கலந்துகொண்டனர்பயிற்சியின் முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் ஏழுமலை நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாட்டினை  வட்டார தொழில்நுட்ப மேலாளர் வீரபாண்டியன் உதவித் தொழில்நுட்ப மேலாளர்கள்  அன்பரசு  சிவசங்கரி ஆகியோர் மேற்கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top