திருநெல்வேலி: வ.உ.சிதம்பரம் பிள்ளை மணிமண்டபத்திற்கு அழைப்பு விடுப்பு!!!
11/08/2024
0
சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 88வது நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலியில் உள்ள வ.உ.சி.மணிமண்டபத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களை வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா மற்றும் வெள்ளாளர் சமூகத்தினர் அழைப்பு விடுத்தனர்.
