கிருஷ்ணகிரி:முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு ஓய்வூதிய குறைபாடுகள் உடனடியாக களைவது குறித்த விழிப்புணர்வு கூட்டம்!!!
11/06/2024
0
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு ஓய்வூதிய குறைபாடுகள் உடனடியாக களைவது குறித்த விழிப்புணர்வு கூட்டம், எஸ்.வி.வி. திருமண மண்டபத்தில்நடைபெறவுள்ளதையடுத்து முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் சென்னை மண்டல பாதுகாப்பு கணக்குகளின் கட்டுப்பாட்டு இயக்குநர் திரு.டி.ஜெயசீலன், ஐ.டி.ஏ.எஸ்., பாதுகாப்பு கணக்குகளின் கட்டுப்பாட்டு துணை இயக்குநர் திரு.டி.திலீப் குமார் ஐ.டி.ஏ.எஸ்., முன்னாள் படைவீரர் நலத் துறை துணை இயக்குநர் கர்ணல் (ஓய்வு) திரு. வேலு ஆகியோர் உள்ளனர்.
