இது போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தினால் போதை மற்றும் சமூக குற்றங்களுக்கு இளைஞர்கள் செல்வதை தவிர்க்கலாம் என தெரிவித்தார்.இதனை தொடர்ந்து பேசிய தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி ,தொடர்ந்து போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வருவதாக கூறிய அவர், இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தாம் குறும்படங்கள் இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டார்.குறிப்பாக தமிழக அரசு போதை பொருட்களை ஒழிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறிய அவர்,இதில் கோவை மாநகர காவல் துறையும் போதை பொருட்களை ஒழிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதை சுட்டி காட்டினார்.மேலும் சர்வதேச அளவில் தமிழக மாணவர்கள் விளையாட்டில் சாதிப்பதற்கு தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து ஊக்கமளித்து வருவதாகதெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் ஜீவன் அஜீஸ்,ஜீவசாந்தி சலீம்,அஷ்ரப்,அபுதாகீர்,சாஹனாஸ்,கோவை தல்ஹா,ஜீவசாந்தி உமா,உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஹாஜி முகம்மது ரபீக் கோப்பை கிரிக்கெட் போட்டி!!!
11/25/2024
0
சமூக குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு போட்டியாக நடைபெற்ற இதனை கோவை மாநகர காவல் துணை ஆணையர் சரவணக்குமார் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி ஆகியோர் துவக்கி வைத்தனர்.தமிழகம் முழுவதும் போதை பொருட்களுக்கான எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தமிழக அரசு,காவல்துறையினருடன் இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்பினரும் செய்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் செலுத்தும் விதமாக ஹாஜி முகம்மது ரபீக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றது.கோவை ஜீவ சாந்தி அறக்கட்டளை மற்றும் எஸ்.எஸ்.எஸ்.( S.S.S) பாய்ஸ் இணைந்து நடத்திய இதில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிரிக்கெட் அணியினர் கலந்து கொண்டனர்.முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் சரவணக்குமார் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்.முன்னதாக கிரிக்கெட் மைதானத்தில் அனைவரும் போதைக்கு எதிரான உறுதி மொழி எடுத்து கொண்டனர்.தொடர்ந்து நாக் அவுட் போட்டிகளாக நடைபெற்ற இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு போப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாநகர காவல் துணை ஆணையர் சரவணக்குமார் பேசுகையில், ,போதை பொருட்களை ஒழிக்க தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்,

