வேலூர்:வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான கணிதம், அறிவியல் பாடங்களின் செயல்முறை விளக்க பயிற்சி!!!

sen reporter
0

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூட்ட அரங்கில் நவம்பர் மாத வேலை அறிக்கை சமர்பித்தல் மற்றும் மீளாய்வுக் கூட்டமும் டிசம்பர் மாதத்திற்கான பரிசோதனைகளை விளக்கும் பயிற்சியும் காலை 10:00 மணிக்கு ஆரம்பமானது. 

வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.மணிமொழியின் வழிகாட்டுதலின்படி மாவட்ட உதவித் திட்ட அலுவலர் (பொறுப்பு) கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை  கூட்டத்தைத் தொடங்கி வைத்து கருத்தாளர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்து  ஆலோசனைகளை வழங்கினார். 

தமிழ்நாடுஅறிவியல்இயக்கத்தின் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வாழ்த்தி பேசினார். மாவட்ட உதவித் திட்ட அலுவலரிடமும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா.குமரனிடமும்கருத்தாளர்களின் வேலை அறிக்கையின் நகல் சமர்ப்பிக்கப்பட்டது. 

இணை ஒருங்கிணைப்பாளர் கே.விசுவநாதன், கருத்தாளர் ஜமுனா ஆகியோர் இணைந்து அறிவியல்பரிசோதனைகளையும்,  கணித செயல்பாட்டையும் செய்து காட்டி விளக்கினர். உபகரணங்கள் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டு பயிற்சியில் பயன்படுத்தப்பட்டது. 15 கருத்தாளர்களும் பயிற்சியில் பங்கு பெற்றனர்.எதிர்காலத் திட்டம் மற்றும் வேலை அறிக்கையின் தொகுப்பும் கருத்தாளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா.குமரன் பயிற்சியின் நிறைவு பெறும் வரை உடனிருந்து தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். 

6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கான  அறிவியல் மற்றும் கணித பாடத்தில் பொருளின் எடையும் புவியீர்ப்பு முடுக்கமும், மின் துகள்களின் இடமாற்றம், கரைசல்கள், தாவர சாகுபடி  விதை விதைப்பதற்கான பொதுவான முறைகள், முக்கோணங்கள் அவற்றின் பண்புகள் ஆகிய செயல்முறை பயிற்சிகள்அளிக்கப்பட்டது. இணை ஒருங்கிணைப்பாளர் கே.விசுவநாதன் நன்றி கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top