கோவை தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையின் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் திறப்பு!!!

sen reporter
0

கோவை தி ஐ பவுண்டேஷன், கண் மருத்துவனையின் புதிய கட்டிடம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை  தேதியன்று மாலை 4 மணியளவில் பிரமாண்டமாகத் திறக்கப்பட உள்ளது.இதன் தொடர்ச்சியாக திறப்பு விழா நிகழ்ச்சிகள், டி.பி.ரோடு R.S. புரத்தில் அமைந்துள்ள ராஜஸ்தானி மண்டபத்தில் மாலை 6 மணி முதல் 7.30 வரை நடைபெறுகிறது.

புதிய கட்டிடம் திறப்பு விழா குறித்து தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின், தலைவர், டாக்டர் ராமமூர்த்தி கூறுகையில், , அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யபட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் தரமான கண் சிகிச்சை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதற்கு இணங்க உலகத்தரம் வாய்ந்த கண் சிகிச்சைகளை குறைந்த கட்டணத்தில் மனித நேயத்துடன் வழங்குவதே எங்கள் லட்சியமாக கொண்டு சேவை புரிந்து வருகிறோம் என்றார். மேலும் 130 க்கும் மேற்பட்ட திறமையான கண் மருத்துவர்கள், 250+ அனுபவமிக்க ஆப்டோமெட்ரிஸ்ட், மற்றும் 1500 க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களைக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருப்பதாக கூறினார்.

விரிவாக்கப்பட்ட புதிய கட்டிடத்தில், அதிநவீன கண் மருத்துவ தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த மையம், அனைத்து விதமான கண் நோய்களுக்கும் சிகிச்சை வழங்கும் வசதி உள்ளது.மேலும40 ஆலோசனை அறைகள், 60ஆப்டோமெட்ரி அறைகள், 10 அதிநவீன அறுவை சிகிச்சை அறைகள்,15 கண் மருத்துவ ஆய்வகம் மற்றும் நோய் கண்டறியும் அறைகள் 40 உள் நோயாளிகள் தங்கும் மற்றும் பல பகல் நேர ஓய்வெடுக்கும் அறைகள் 4 கண்ணாடியகம் மற்றும் மருந்தகம் 110 கார் பார்க்கிங் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top