தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது!!!
December 04, 2024
0
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.V.R.ஶ்ரீனிவான்அவர்களின்தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் அனைத்து புதன் கிழமைகளிலும் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று புகார் மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் விசாரணை மேற்கொண்டார். மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.