மாதனூர்திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம், மாதனூர் ஊராட்சியில் 76-வது குடியரசு தினதாதை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றுதல் மற்றும் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் எம்.சி. குமார் தலைமையில் நடந்தது. கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கார்த்தி, ஊராட்சி செயலர் ராமு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோதண்டன், சுமதி குமார், தட்சிணாமூர்த்தி, துர்கா ஸ்ரீதர், வெங்கடேசன், தனலட்சுமி ராம்குமார், மல்லிகா, சிவகாமி ராஜேந்திரன் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள், OHT ஆப்ரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உள்ளி வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், உள்ளி ஊராட்சியில் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றுதல் மற்றும் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சதீஷ்குமார், ஊராட்சி செயலர் சுரேஷ்பாபு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுசீலா, ஞானபிரகாஷ், நிரோஷா, காஞ்சனா, சாந்தி, மதன்குமார், தாமு, ராஜேஸ்வரி, சுகாதார ஊக்குநர் தேன்மொழி, மக்கள் நலப் பணியாளர் லதா மற்றும் OHT ஆப்ரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வளத்தூர்வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், வளத்தூர் ஊராட்சியில் 76 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றுதல் மற்றும் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா சேட்டு தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணைத் தலைவர் செல்வம் ,ஊராட்சி செயலாளர் ரேவதி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி கலைவாணன், ஜாஹ்தா பானு ஜாவித்பாஷா,தௌலத் பாஷா, எழிலரசி வெங்கடேசன்,மாலதி தங்கமணி, புவனேஸ்வரி பூபதி, கலைச்செல்வி நாதமுனி, OHT இயக்குநர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செட்டிகுப்பம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், செட்டிகுப்பம் ஊராட்சியில் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றுதல் மற்றும் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் சுரேஷ்பாபு, ஊராட்சி செயலர் பரந்தாமன், வார்டு உறுப்பினர்கள் கண்ணன், வசந்தி, கம்பீரன்,சாந்தி , சுவாதி, புருஷோத்தமன், பல்கீஸ், நதியா மற்றும் பொதுமக்கள், OHT இயக்குநர்கள், ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேல்முட்டுக்கூர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், மேல்முட்டுக்கூர் ஊராட்சியில் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றுதல் மற்றும் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு பெருந்தலைவர் சத்யானந்தம், ஒன்றியக் குழு துணைத் தலைவர் அருண்(எ) முரளி, மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் ஆனந்தி முருகானந்தம், ஒன்றியக் குழு உறுப்பினர் செல்வி சிவக்குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நித்யா வாசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,கிராம நிர்வாக அலுவலர் உஷா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கிரிஜா சம்பத், வெங்கடேசன், கௌரி சண்முகம், செல்வி வெங்கடேசன், மலர்க்கொடி சதீஷ், சரவணன், விஜயகுமார்,ஜோதி, பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ராஜேஷ் நன்றி கூறினார்.
கொண்டசமுத்திரம்வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சியில் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றுதல் மற்றும் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக் குழு பெருந்தலைவர் சத்யானந்தம் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜாத்தி, ஊராட்சி செயலர் ராஜா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுடர்குடி, சிவகவி, புவனாதேவி, தமிழ்ச்செல்வி, சரவணன், உமாபதி, ஜோதி, கமல்ராஜ், ஹரிதாஸ், செல்வி, கள்ளழகன், சதீஷ் காந்தி, சுபாஷினி, கலைவாணி, OHT இயக்குனர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
