விக்கிரம ராஜசிங்கேவின் நினைவு தினமான ஜனவரி 30ம் தேதி முத்து மண்டபத்தில் ராஜாவின் வாரிசு மதுரையை சேர்ந்த அசோக் ராஜா பொதுமக்கள் தமிழார்வலர்கள் பல்வேறு சமுதாய அமைப்பினர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.தமிழக அரசு அடுத்த ஆண்டு முதல் இதனை அரசு விழாவாக நடத்த வேண்டுமெனவும் வேலூர் கோட்டையில் அரசன் சிறை வைக்கப்பட்ட இடம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காகம் திறந்து வைக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க பொதுச் செயலாளர் போஸ் நாயுடு தலைமை வகித்தார். தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் மற்றும் பலிஜா நாயுடு சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
வேலூர்: இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னருக்கு சிலை வைக்க கோரிக்கை!!!
1/31/2025
0
இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் விக்ரம ராஜசிங்கே நினைவு தினத்தை அடுத்த ஆண்டு முதல் இதனை தமிழக அரசு அரசு விழாவாக நடத்த கோரிக்கை.வேலூர் மாவட்டம், வேலூர், பாலாற்றங்கரையில் இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் விக்கிரமராஜசிங்கே குடும்பத்தினருடன் ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வேலூர் கோட்டையினுள் 16 ஆண்டுகள் சிறையில்அடைக்கப்பட்டிருந்தனர்.அவர்களின் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினரின் கல்லறை பாலாற்றங்கரையில் உள்ளது. இதனை தமிழக அரசு சார்பில், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள் முத்து மண்டபமாக கட்டி நினைவிடமாக மாற்றினார். இதனை அரசு பராமரித்து வருகிறது.
