கோவையில் பாதாள சாக்கடை பணிகளுக்கு தோண்டப்பட்ட குழியில் மண் சரிந்து இளைஞர் உயிரிழப்பு காவல்துறை விசாரணை !!!
2/17/2025
0
கோவை மருதமலை ஐ.ஓ.பி காலனி வீரகேரளம் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது இந்த பணியானது l&t நிறுவனம் ஒப்பந்த முறையில் மற்றொரு நிறுவனத்திற்கு பணிகள் செய்ய கொடுத்து இருக்கிறது. இதில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய கௌதம் என்ற இளைஞர் பணியாற்றி வந்தார் அப்பொழுது எதிர்பாராத விதமாக மண் சரிந்து உள்ளே விழுந்து மண்ணில் புதைந்தார். இது குறித்து அங்கு பணியாற்றி இருந்தவர்கள் வடவள்ளி காவல் துறை மற்றும் தீயணைப்பு மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இளைஞரை மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரயோத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வடவள்ளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
