சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த கண்ணகி நகர் பகுதியை சேர்ந்ததீபிகாஎன்றபெண்ணிற்கு திடீரென பிரசவ வலியானது ஏற்பட்டுள்ளது இதை அடுத்து உறவினர்கள் கண்ணகி நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு போதிய மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனை பணிபுரிந்து வந்த செவிலியர் குழந்தை நலமுடன் இருக்கிறது நீங்கள் கோஷோ மருத்துவமனைக்கு செல்லலாம் என தெரிவித்த நிலையில் உறவினர்கள் பிரசவத்திற்காக வந்த தீபிகாவை
கோஷோ மருத்துவமனை சென்று பிரசவம் பார்த்து உள்ளனர். அங்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கோஷோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதை அடுத்து இறந்த நிலையில் பிறந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கண்ணகி நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழலானது ஏற்பட்டுள்ளது.எனவே எங்களுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் இப்பகுதியில் வருகை தந்து எங்களுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் உறவினர்கள்தெரிவிக்கின்றனர்.போராட்டம் நடைபெற்று வரும் இடத்திற்கு வந்த கண்ணகி நகர் போலீசார் போராட்டம் நடத்தி வரும் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
