புதுடெல்லி:யூனியன் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு!!!

sen reporter
0


 சமீபத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த யூனியன் பட்ஜெட் 2025-26 இல், தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என சில சுயநலன் சார்ந்த தரப்புகள் கூறியுள்ளன. ஆனால், இந்த பட்ஜெட்டில் ரயில்வே குறித்த பல்வேறு முன்னோடித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, மேலும், அவை தமிழ்நாட்டின் ரயில்வே வளத்தையும், மூலதனம் பெருக்கம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் மேம்படுத்த முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே வளங்களை மேம்படுத்த ரூ.6,626 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் ரயில்வே துறையின் முன்னேற்றம் (2014 முதல் இன்று வரை) 2014 வரை தமிழ்நாட்டில் 1,284 கிமீ ரயில்வே பாதைகள் செயல்பாட்டில் இருந்தன.2014ல் ஆட்சி தற்போதைய மத்திய அரசு பொறுப்பேற்ற பிறகு, மொத்தம் 1,303 கிமீ பாதைகள் புதிதாக அமைக்கப்பட்டன.இதற்காக ரூ.33,467 கோடி செலவிடப்பட்டுள்ளது.நடைமுறையில் உள்ள நடப்பு 22 ரயில்வே திட்டங்கள்:

புதிய ரயில்வே பாதைகள் – 10 திட்டங்கள்ரயில்வே பாதை மாற்றம் (Gauge Conversion) – 3 திட்டங்கள் இரட்டை/பன்மடங்கு பாதை அமைத்தல் – 9 திட்டங்கள்

முக்கிய திட்டமாக மதுரை-தூத்துக்குடி (அருப்புக்கோட்டை வழியாக) 143.5 கிமீ நீள ரயில்வே பாதை அமைக்கப்படுகிறது.

பாதுகாப்பு மேம்பாட்டு நடவடிக்கைகள்:கவச் (Kavach) பாதுகாப்பு அமைப்பு, ரயில்வே பாதைகளில் 600 கிமீ வரையில் முதற்கட்டமாக நிறுவப்படுகிறது.

மொத்தம் 1,460 கிமீ பாதைகளில் பாதுகாப்பு அமைப்பு முழுமையாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மின்மயமாக்கல் (Electrification) மற்றும் புதிய ரயில்வே பணிகள்:

மொத்தம் 2,242 கிமீ ரயில்வே பாதைகள் தற்போது மின்மயமாக்கப்பட்டுள்ளன, இது தமிழ்நாட்டின் மொத்த ரயில்வே பாதைகளில் 94% ஆகும்.

பாம்பன் பாலம் ரூ.535 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது, இதனை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தொடங்கி வைப்பார்.

அம்ருத் பாரத்’ நிலைய மேம்பாட்டுத் திட்டம் (Amrit Bharat Station Scheme):

மொத்தம் 77 தொடர்வண்டி நிலையங்கள் புதுப்பிக்கப்படுகின்றன.

இதற்காக ரூ.2,498 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.முக்கியமாக எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி போன்ற முக்கிய தொடர்வண்டி நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.

இதன்மூலம் பயணிகள் உயர்தர வசதிகளுடன் தடையில்லா பயண அனுபவம் பெறலாம்  நவீன ரயில் சேவைகள்:

மத்திய அரசு 50 ‘நமோ பாரத்’ (Namo Bharat) ரயில்கள், 100 ‘அமித் பாரத்’ (Amit Bharat) ரயில்கள் மற்றும் 200 ‘வந்தே பாரத்’ (Vande Bharat) ரயில்கள் இயக்க நிதி ஒதுக்கியுள்ளது.

இதில் சில தமிழ்நாட்டின் வழியாக இயங்கும் என்பதால் பயணிகள் வேகமான, நவீன மற்றும் உலக தரத்திலான வசதிகளை அனுபவிக்கலாம்.

இந்த அனைத்து திட்டங்களும் தமிழ்நாட்டின் ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்தி, பயணிகள் பயண அனுபவத்தை உயர்த்த உதவும் என்ற நம்பிக்கை உயர்ந்துள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top