கோவை:தமிழ் வளர்ச்சித்துறை உலகத் தமிழ் சங்கம்-மதுரை மற்றும் குமரகுரு கல்லூரி இணைந்து தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி!!!

sen reporter
0

முதலாவதாக தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் ஒளவை அருள் வரவேற்புரை வழங்கினார். நிகழ்விற்கு  குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


நிகழ்வின் துவக்கவிழாவில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் பிரசிடெண்ட் சங்கர் வானவராயர்; குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் விஜிலா எட்வின் கென்னடி; கல்லூரியின் தமிழ் ஆலோசகர் மரபின் மைந்தன் முத்தையா மற்றும் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தமிழ் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தமிழ் வளர்ச்சித் துறை உலகத் தமிழ் சங்கம் குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரி  இணைந்து நடத்தும் தமிழ் ஆசிரியர் மாணவர் புத்தாக்க பயிற்சி குமரகுரு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது - இதில் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டதைத் தொடர்ந்து.

பின்னர் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் செய்தியாளர் சந்தித்தார் அப்போதுஅவர்கூறியதாவது. தமிழ் வளர்ச்சி துறை  சார்பாக பல்வேறு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம் தமிழ் மொழி புத்தாக்க பயிற்சி சார்பில் கோவையில் உள்ள குமரகுரு கல்லூரியில் ஒத்துழைப்போடு தமிழ் ஆசிரியர் மற்றும்  மாணவர் செல்வங்கள் இந்த நிகழ்ச்சியை துவக்கி உள்ளோம்  பிறமொழிகள் ஆதிக்கம் காரணமாக தாய்மொழி மெல்ல, மெல்ல தமிழர்களுடைய இடைவெளி ஏற்படுகிறது. அதனை தடுக்கின்ற வகையில் இந்த மொழிக்கு  புத்தாக்க பயிற்சி  உருவாக்கி மாணவர் செல்வங்களுக்கு ஆசிரிய பெருமக்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது. தொடர்ந்து இந்த பயிற்சி  பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும்.

தமிழ் வளர்ச்சி துறையில்  இளங்கலை  தமிழ்  இலக்கியம் பெற்றவர்களுக்கு   முதல் தமிழ்நாடு அரசு பணியாளர்  தேர்வாணையம்  உதவி இயக்குனர் பணியிடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் பணி நியமன் ஆணை வழங்கப்படும் என்றார். தமிழ்நாடு முழுவதும் பலகையில் தமிழ் மொழி   பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு வரவேண்டும் விரைவில் விரைவில் தமிழ் மொழி உரிய அங்கீகாரம் பெற்று பெயர் பலகை இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்

மேலும்  கர்நாடகா மொழிலில் கர்நாடக மொழியில் தான் இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் நமக்கென்று ஒரு அங்கீகாரம் இருக்க வேண்டும் யாரும் இந்தி படிக்க வேண்டாம் என கட்டாயப்படுத்த வில்லை அவர்களுடைய விருப்பம் நம்முடைய அரசு  அதில் தலையிடுவதில்லை பிற மொழிகளில் படிப்பதில் எந்த ஆர்வம் இருக்கிறதோ படித்துக் கொள்ளலாம் தமிழ் மொழி உரிய அங்கீகாரம் பெற வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top