இந்நிலையில் இது போன்று வியாபாரம் செய்து வரும் அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் கரும்புகடை வியாபாரிகள் நலச்சங்கம் செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள பாரத் நகர் 2 வது வீதியில் சங்கத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் புதிய அலுவலகம்துவங்கப்பட்டது. இதற்கான துவக்க விழாவில் கரும்புகடை வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவர் சிராஜ்தீன்,செயலாளர் சையத் முஸ்தாக்,ஆகியோர் தலைமை தாங்கினர்..
இதில் கவுரவ ஆலோசகர் முகம்மது யூசுப், துணை தலைவர் நசீர்,துணை செயலாளர் ஹக்கீம்,இணை தலைவர் சம்சுதீன்,இணை செயலாளர் அப்துல் மாலிக்,பொருளாளர் சம்சுதீன்,மேலாளர் பைசல் ரஹ்மான்,தணிக்கையாளர் அபுதாகீர்,இணை மேலாளர் முகம்மது ராஃபி ,மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் அபுதாகீர்,முகம்மது இக்பால்,ரோஷன் அஷ்ரப்,அப்துல் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய அலுவலகம் துவங்கப்பட்டதை தொடர்ந்து சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் கரும்புகடை பகுதிக்கு வந்து பொருட்களை வாங்கி செல்வதாகவும், எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பகுதிக்கு வங்கி ஒன்றை அமைக்க முன்வரவேண்டும் எனவும் மேலும் பொது கழிப்பிடம்,மருத்துவமனை,அரசு உயர்நிலை பள்ளி போன்ற கட்டமைப்பு வசதிகளை இந்த பகுதியில் ஏற்படுத்தி தர வேண்டும் என கரும்புகடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்...
