கடந்த ஜனவரி மாதம் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக நடைபெற்ற தமிழ் கட்டுரை போட்டியில் ,தென்காசியை சார்ந்த திருமதி மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி யோக ஸ்ரீ மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் முதலிடமும் பெற்று மிகப்பெரிய சாதனையை புரிந்துள்ளார்.
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் ,மாணவி யோக ஸ்ரீயையும், அவருடைய பெற்றோர் திரு முப்படாதி, திருமதி சுந்தரி முப்புடாதியையும் அழைத்து, பாராட்டி கௌரவித்தார்.மாணவி யோக ஸ்ரீ மென்மேலும் வளர்ந்து மேலும் பல சாதனை புரிய வேண்டும் என வாழ்த்தி, அனைத்து மருத்துவர்கள் சார்பாக நினைவுப்பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் செல்வ பாலா, குழந்தைகள் பிரிவு தலைமை மருத்துவர் கீதா, மகப்பேறு பிரிவு தலைமை மருத்துவர் புனிதவதி ,மருத்துவர்கள் ராஜேஸ்வரி, பிரதிபா, தலைமை செவிலிய கண்காணிப்பாளர் பத்மாவதி, தலைமை மருந்தாக ராமச்சந்திரன் அலுவலக உதவியாளர்துர்கா,தீயணைப்புத்துறை காவலர் மாதவன், ஆசிரியை தமிழ்ச்செல்வி, மருத்துவமனை பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
