திண்டுக்கல் :ரெட்டியார்சத்திரம் பாதாள செம்பு முருகன் கோவில் அறங்காவலர் அறிவிப்பு!!!

sen reporter
0


  


ரெட்டியார்சத்திரம் பாதாள செம்பு முருகன் கோவில் அறங்காவலர் அறிவிப்பு திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் காமாட்சிபுரம் ஊராட்சிக்குட்பட்ட ராமலிங்கம்பட்டி போகர் நகரில் அமைந்துள்ள  ஸ்ரீ பாதாள செம்பு முருகன் கோவில் உறுப்பினர் என்றோ, பாதாள செம்பு முருகன் கோவில் நிர்வாகிகளின்  நண்பர் என்றோ, கோவிலின் அறங்காவலருக்கு உறவினர் என்றோகோவிலின் வழக்கறிஞர் என்றோகோவில்நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டி,  பாதாள செம்பு முருகன் கோவில் வேஷ்டி கட்டி கொண்டு பிற நிறுவனங்களில் சலுகையோ, பணமோ கேட்டால் கொடுத்து ஏமாற வேண்டாம். அதே போல் பாதாள செம்பு முருகன் கோவில் பெயரை கூறி பிற கோவில்களில் சிறப்பு தரிசனம் கேட்டால் அனுமதிக்க வேண்டாம். பாதாள செம்பு முருகன் கோவில் பெயரை யாரும் எங்கும் பயன்படுத்தினாலும் பாதாள செம்பு முருகன் கோவில் நிர்வாகத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் . சந்தேகபடும் படி  நபர்கள் வந்தால் உடனடியாக பாதாள செம்பு முருகன் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்டுக் கொள்ளலாம். இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை பாதாள செம்பு முருகன் கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top