கோவை:தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையில் உலக குளுக்கோமா வாரம் மார்ச் 10 முதல் 15, 2025 வரை அனுசரிக்கப்படுகிறது!!!

sen reporter
0


 உலக குளுக்கோமா வாரத்தை (மார்ச் 10-15) முன்னிட்டு, 'தி ஐ ஃபவுண்டேஷன்' மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, குளுக்கோமா நோய் குறித்து பொதுமக்களுக்கு தகவல் வழங்கி, கண் பராமரிப்பின் முக்கியத்துவம் விளக்கப்பட்டது.பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் சித்ரா ராமமூர்த்தி மற்றும் குழந்தைகள் நலக் கண் மருத்துவர் முரளிதர், 'குளுக்கோமா நோயாளிகள் சிறப்பாக சிகிச்சை பெறவேண்டும் என்பதற்காக மார்ச் 10 முதல் 15 வரை 'தி ஐ ஃபவுண்டேஷன்' மருத்துவமனையின் அனைத்து கிளைகளிலும் இலவச கண் பரிசோதனை வழங்கப்படும். அறுவை சிகிச்சை மேற்கொள்ள விரும்பும் நோயாளிகளுக்கு 10 சதவீத கட்டணச் சலுகையும் வழங்கப்படும். மருத்துவமனை சார்பில் பல்வேறு ஊர்களில் இலவச கண் பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன' என தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில் ,உலக குளுக்கோமா வாரம் என்பது குளுக்கோமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக குளுக்கோமா சங்கத்தின் (WGA) உலகளாவிய முயற்சியாகும். தொடர்ச்சியான உலகளாவிய நடவடிக்கைகளின் மூலம், நோயாளிகள், கண் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள், பார்வையைப் பாதுகாப்பதில் பங்களிக்க அழைக்கப்படுகிறார்கள். குளுக்கோமாவைக் கண்டறிவதற்காக வழக்கமான கண் (மற்றும் கண் நரம்பு) சோதனைகளை மேற்கொள்ளுமாறு அனைவரையும் அறிவுறுத்துவதே இதனுடைய குறிக்கோள். நம் நாட்டில் குளுக்கோமா (கண் அழுத்த நோய்) கண்டறிய நடத்திய சோதனைகள் 3% முதல் 5% இந்தியர்கள் இந்நோயினால் தாக்கப்படும் அபாயத்தில் உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த ஆபத்தான எண்ணிக்கையில் 90% பேர் குளுக்கோமா நோயின் பாதிப்யை கண்டறியாமல் இருக்கிறார்கள். 

உலகளவில் 64.3 மில்லியன் மக்களுக்கு குளுக்கோமா பாதிப்புள்ளது, இதில் 2.1 மில்லியன் மக்கள் குளுக்கோமாவால் கண் பார்வையை இழந்துள்ளார்கள் என நம்பப்படுகிறது. அதில் 40 வயதிற்கு மேற்பட்ட சுமார் 11.9 மில்லியன் இந்தியர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு 12.8% பேர் கண்பார்வையை மேலும் இழக்க வாய்ப்புள்ளது. இந்த நோயின் பாதிப்பு பற்றி பல்வேறு தரப்பட்ட மக்களிடம் நடத்திய  ஆய்வுகளின் படி சுமார் 2% முதல் 13% வரை பாதிப்பு ஏற்படும் என்பதை வேலூர் கண் ஆய்வு, சென்னை குளுக்கோமா ஆய்வு, அரவிந்த் கண் ஆய்வு, ஆந்திர மாநில கண் நோய் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கண்பார்வை இழப்பை தடுக்கக்கூடிய பல காரணங்களில் குளுக்கோமா மூன்றாவது இடத்தில் இருப்பதால், இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது, அவசியமாயிருக்கிறது. 

குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மார்ச் 10 முதல் 15 வரை எங்களது அனைத்து கிளைகளிலும் குளுக்கோமா நோயாளிகளுக்கு இலவசமாக கண் பரிசோதனை வழங்கப்படும், மேலும் அறுவை சிகிச்சை செய்து கொள்வோருக்கு, கட்டணத்தில் 10% சலுகைகள் வழங்கப்படும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை அனைத்து ஊர்களிலும் இலவச கண் பரிசோதனை முகாம்களும் நடைபெறுகின்றன. மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வருகின்ற மார்ச் 12ஆம் தேதி கோயம்புத்தூர் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை முன்னிலையில் மனித சங்கிலி விழிப்புணர்வு நடத்த உள்ளோம்.தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை, மருத்துவ இயக்குநர் டாக்டர். சித்ரா ராமமூர்த்தி அவர்கள் கூறுகையில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, குளுக்கோமா பரிசோதனை கட்டாயமாக செய்து கொள்ள வேண்டும் அப்படி செய்வதால் குளுக்கோமா நோய்கள் இருந்தால் முன்கூட்டியே அதனை கண்டறிந்து அதற்கான சிறந்த சிகிச்சைகளும் மருந்துகளும் தரப்படும். எனவே மக்கள் அனைவரும் வருடத்திற்கு ஒருமுறை கட்டாயமாக கண் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியமானது. குளுக்கோமா என்பது படிப்படியாக, எந்த ஒரு அறிகுறியுமின்றி கண் அழுத்தம் அதிகரிப்பதினால் கண் பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி நோயின் அறிகுறியை உணரமுடியாத பட்சத்தில் இந்நோயினை கண்டறியாமல் விட்டுவிடும்போது இந்நோயின் தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


எனவே, 40 வயதுக்கு மேல் சர்க்கரை நோய்,  உயர் கிட்டப்பார்வை, காயம், வீக்கம், ஸ்டீராய்டு உபயோகித்தல்  மற்றும் பிறவி கண் கோளாறுகள் உள்ளவர்களுக்கு குளுக்கோமா வர அதிக வாய்ப்புள்ளது“ என டாக்டர். சித்ரா ராமமூர்த்தி, மருத்துவ இயக்குநர் மற்றும் குளுக்கோமா பிரிவு ஆலோசகர், மற்றும் டாக்டர் ஆர், முரளிதர் தி ஐ பவுண்டேஷன், கோவை, குளுக்கோமா மற்றும் குழந்தைகள் கண் மருத்துவ பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் உறுதிசெய்கிறார். வழக்கமாக எங்களிடம் பரிசோதனைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் குளுக்கோமா சம்பந்தப்பட்ட பார்வைத்திறன் பரிசோதனைகளான கண் நீர் அழுத்தம் மற்றும் கண்ணில் அடைப்பு உள்ளதா என்பதை கோனியோஸ்கோபி மூலம் அறிந்து, பெரிமெட்ரி மூலம் விஷவல் பீல்ட்ஸ் குறைபாடு மற்றும் ஓசிடி மூலம் ரெட்டினா நரம்பின் தன்மை அறிந்து, சொட்டு மருந்து சிகிச்சை, அறுவை சிகிச்சை மூலம் குளுக்கோமாவால் ஏற்படும் பார்வை இழப்பை தடுத்துவருகிறோம். கடந்த காலத்தில் குளுக்கோமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் வெறும் 50 சதவீதம் நோயாளிகள் மட்டுமே இந்த நோய்க்கான கண்பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். அதிக அளவு பாதிக்கப்படும் வாய்ப்புகளுள்ள நோயாளிகள் குளுக்கோமா நோயிர்க்குறிய வழக்கமான பரிசோதனைகளை கட்டாயம் மேற்க்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை அதிகரித்துள்ளது என்றும் “இந்நோய் கண்பார்வையை எந்த அறிகுறியுமின்றி திருடும் நோய்” என்றும் கூறுகிறார். டாக்டர். சித்ரா ராமமூர்த்தி, மருத்துவ இயக்குநர், தி ஐ பவுண்டேஷன்.மேலும் குளுக்கோமா பற்றி தகவல்களை அறியவும், முன்பதிவு செய்யவும் கீழ்கண்ட எண்களில் தொடர்புகொள்ளவும்: 9442217796, 0422 4242000

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top