இதனால் அனைத்து ரக வாழைப் பழக்கங்களின் விலையும் உயர்ந்து உள்ளது. இது குறித்து வியாபாரிகள் கூறும் போது கோவை மாவட்டம் மட்டுமின்றி சத்தியமங்கலம், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை நாளொன்றுக்கு 6 டன் முதல் 8 டன் வரை வாழ்த்தார்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் தற்போது 4 டன் முதல் 5 டன் வரை மட்டுமே வாழ வாழைத்தார்கள் விற்பனைக்கு வருகிறது. இதனால் அனைத்து ரக வாழைத்தார்கள் விளையும் அதிகரித்து உள்ளது.
ஒரு கிலோ செவ்வாழைப் பழம் ரூபாய் 120 முதல் 125 வரை விற்பனை ஆகிறது. பச்சை வாழைப் பழம் ஒரு கிலோ ரூபாய் 40 முதல் ரூபாய் 50, ரஸ்தாலி ரூபாய் 70, கேரளா ரஸ்தாலி ரூபாய் 70 முதல் 80 வரையும், நேந்திரம் பழம் ரூபாய் 65 வரை விற்பனை ஆகிறது. கடந்த சில வாரங்களை விட அனைத்து வாழைகளும் ஒரு கிலோவுக்கு ரூபாய் 15 முதல் 25 வரை விலை உயர்ந்து உள்ளது. வாழைத்தார் ஒன்று ரூபாய் 1,600 முதல் ரூபாய் 1,300 வரை விற்பனையானது என்றும், வியாபாரிகள் தெரிவித்தனர்.வாழைத்தார்கள் விலை அதிகரித்து உள்ளதால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
