காரமடை ஊராட்சிக்கு உட்பட கடமான் கோம்பை கிராமத்தில் கோட்டாச்சியர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது எனவும்,2.5 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்க அரசிடம் அனுமதி கேட்டு கருத்துரு அனுப்பபட்டுள்ளது எனவும் தெரிவித்தார். குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அவர்,வனத்துறை தடையில்லா சான்றிதழ் வாங்கப்பட்டுள்ளது எனவும்,செல்போன் டவர் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அனைத்து பணிகளும் துவங்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் நெல்லித்துறை அருகே உள்ள கடமான்கோம்பை கிராமத்தில் 2.5 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்க அரசிடம் அனுமதி கேட்டு கருத்துரு அனுப்பபட்டுள்ளது எனவும் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் அடுத்த சில மாதங்களில் செய்து கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பானவர் தெரிவித்தார்!!!
3/03/2025
0
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த நெல்லித்துறை ஊராட்சியில் கடமான் கோம்பை உட்பட 10க்கும் மேற்பட்ட பழங்குடி கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உரிய அடிப்படை வீசி இல்லாத நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் கடமான் கோம்பை பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னால் உயிரிழந்தார். அவரது உடலை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து கொண்டு சென்ற நிலையில், நீராடி என்ற இடத்தில் இருந்து கடமான் கோம்பைக்கு வரை சாலை வசதி இல்லாத காரணத்தால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதியின் நடுவே டோலி கட்டி, உடல் தூக்கி செல்லப்பட்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பானவர் இன்று பள்ளிகளில் பன்னிரென்டாம் வகுப்பு தேர்வை ஆய்வு செய்தார். அப்போது பேட்டியளித்த அவர்
