வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் கே.வி.குப்பம் மோர்தனா கால்வாயில் தூர்வார ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா!!
3/11/2025
0
வேலூர் மாவட்டம், குடியாத்தம் மற்றும் கி.வ.குப்பம் தாலுகாவில் உள்ள மோர்தானா இடது பிரதான கால்வாய் தூர்வாரம் பணிக்கு ரூ.2.50 கோடி மதிப்பீட்டில், தூர்வாரி புனரமைக்கும் பணிக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள், மேல்பாலாறு வடிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆர்.ரமேஷ் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி, மேல்பாலாறு வடிநில வட்ட செயற்பொறியாளர் பிரபாகர், அரசு துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
