அதன்படி அந்தப் பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி ரூ. 8 லட்சம் செலவில் நடைபெற்று பணிகள் நிறைவு பெற்ற நிலையில் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு குத்துக்கல்வலசை ஊராட்சி மன்றத் தலைவர் செ.சத்யராஜ் தலைமை வகித்து, திறந்து வைத்தார். துணைத் தலைவர் மா.சண்முக சுந்தரம் முன்னிலை வகித்தார் ஊராட்சி செயலர் சமுத்திரம் அனைவரையும் வரவேற்றார்.
இதில் குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சரவணன், மல்லிகா,கருப்பசாமி, அம்புலி, கண்ணன்,இசக்கிதேவி, கலைச்செல்வி, சங்கரம்மாள், மைதீன்பாத்து, சந்திரா, சுப்பையா, மற்றும் மகளிர் சுய உதவிக் குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
