ரூ.97 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட வல்லிபுரம் அரசுப் பள்ளியை தொல்.திருமாவளவன் எம்.பி. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தனர்... திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட வல்லிபுரம் கிராமத்தில் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.97 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 5 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளிக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு தலைமை தாங்கினார். வல்லிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சோபியா அமுல் பார்த்தசாரதி, துணை தலைவர் அம்பிகா சீனிவாசன், பள்ளியின் தலைமையாசிரியை கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விசிக தலைவருமான தொல்.திருமாவளவன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் புதிய பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர். இதில் காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, ஒன்றிய குழுத் தலைவர்கள் ஆர்.டி.அரசு, சாந்தி ராமச்சந்திரன், ஏழுமலை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட கவுன்சிலர் கலாவதி நாகமுத்து, திமுக ஒன்றிய செயலாளர்கள் எடையாத்தூர் சரவணன், சிற்றரசு, திமுக பொதுக்குழு உறுப்பினர் வெளிக்காடு ஏழுமலை,ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் சுஜாதா பாரதி பாபு,விசிக மாவட்ட செயலாளர்கள் கனல்விழி, தமிழினி, பொன்னிவளவன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆதவன் மற்றும் வல்லிபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

