லெமன் மார்கெட் மற்றும் தினசரி காய்கனி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளையும் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும்,
மேலும் தினசரி மார்க்கெட், பேருந்து நிலைய கடைகளுக்கு வாடகை மற்றும் வைப்புத் தொகையை குறைத்து அனைத்து வியாபாரிகளும் பயனடையும் படி செய்ய வேண்டும் எனவும்,மேலும் தொழில் வரி மற்றும் டிரேடர்ஸ் லைசன்ஸ் அதிகமாக உள்ளது ரூ.700 முதல் 52, 500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாதாரண வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அதனை குறைக்க வேண்டும் எனவும்,கட்டிட தீர்வை வருடத்திற்கு 6 சதவிகிதம் என்று அறிவித்துள்ளதை குறைத்து அதனை 2 சதவிகிதம் அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை 6 சதவிகிதம் என்று மாற்ற வேண்டும் எனவும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நகர வர்த்தக சங்கம் சார்பில் கடையடைப்பு செய்து அறவழியில் போராடுவோம் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின்போது நகர வர்த்தக சங்கத் தலைவர் முத்தையா, செயலாளர் குருநாதன், பொருளாளர் கண்ணன் சிஎஸ்எம்எஸ் சங்கர சுப்ரமணியன், அனுசுயா மாரிமுத்து, சங்கரன் இணைச் செயலாளர் சின்னசாமி செயற்குழு உறுப்பினர்கள் பொன்ராஜ் சண்முகம், ராமர் , காசி மணி, செல்வம், துணை தலைவர் ஏ. கே கணேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.