அப்போது பேசிய கோவை மாநகர தலைவர் ரமேஷ் குமார், இந்த பாரத நாடு 1947 - ல் சுதந்திரம் பெற்று, அனைத்து மாநிலங்களிலும் மக்களாட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் துரதிர்ஷ்டவசமாக 1967 இல் இருந்து மக்களுக்கு எதிரான ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக, 1947 இல் ஆரம்பித்து, இன்றைய தினம் வரை ஒவ்வொரு முறையும் பொய்யைச் சொல்லி ஆட்சிக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். 1967 - இல் ஆரம்பிக்கப்பட்ட பொய், உதாரணத்திற்கு ஒரு படி நிச்சயம் மூன்று படி இலட்சியம் என்று, பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்கள். அதன் பிறகு மக்களை முட்டாளாக்கி ஒவ்வொரு முறையும், பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். அதன் பிறகு எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தார், அதன் பிறகு இவர்களால் ஆட்சிக்கு வர முடியவே இல்லை. அம்மையார் ஜெயலலிதா வந்த பிறகும் இவர்களால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஒரு ஐந்து ஆண்டுகள் கழித்து கழித்து தான் ஆட்சிக்கு வர முடிந்தது.
திமுகவின் வரலாறு மற்றும் தமிழகத்தின் வரலாறை பார்த்தோமானால், தி.மு.க வேண்டும் என்று விரும்பி மக்கள் என்றுமே வாக்களித்தது கிடையாது. எம்.ஜி.ஆர் வேண்டும் ஜெயலலிதா வேண்டும் என வாக்கு அளித்தது உண்டு. சில நேரங்களில், அவர்களின் மீது ஏற்பட்ட தவறான காரணங்களால், ஜெயலலிதா வேண்டாம் என்று வேறு வழியே இல்லாமல் தி.மு.க வுக்கு வாக்கு அளித்தனர். என்றுமே மக்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று வாக்களிக்கவில்லை. அவர்களும் எப்பொழுதுமே மக்களுக்கு நல்ல விஷயங்களை செய்து ஆட்சிக்கு வந்தது இல்லை. 2021 ல் கூட பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். குறிப்பாக தற்போது தமிழ்நாட்டிற்கு அருகில் இருக்கக் கூடிய எந்தெந்த மாநில கட்சிகள் எதிராக இருக்கிறதோ, இவருடைய சுய நலத்திற்காக, பக்கத்தில் இருக்கக் கூடிய மாநிலங்களில் இருக்கக் கூடிய காங்கிரஸ் கம்யூனிஸ்டு முதல்வர்களை, தமிழகத்திற்கு வர வைத்து, தொகுதி மறு வரை என்ற பொய்யான விஷயத்தை சொல்லி கூட்டம் போட்டு ஒரு சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார். 1967 - ல் ஏமாந்ததைப் போல் தமிழக மக்கள் இன்றும் ஏமாறக் கூடாது. மக்கள் இதை உற்று கவனிக்க வேண்டும். தமிழக மக்கள் நன்றாக படித்தவர்களாக இருக்கிறார்கள் அவர்களுக்கு அனைத்து விஷயங்களும் தெரியும், சமூக ஊடகங்கள் கையில் இருப்பதால் அனைத்து விஷயங்களும் அப்டேட் ஆக தெரிந்து விடும். இவர்கள் மூன்று விஷயங்களை மறைப்பதற்காக மட்டுமே இது போன்றவைகளை கையில் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆயிரம் கோடி ஊழல் செய்து டாஸ்மாக்கில் கொள்ளை அடித்த விஷயத்தை மறைக்க வேண்டும், இரண்டாவது மும்மொழிக் கொள்கை, மூன்றாவது தொகுதி மறு வரையறை. இதில் தொகுதி மறு வரை என்பதை எப்படி செய்யப் போகிறோம் என மத்திய அரசு விளக்கமே கொடுக்கவில்லை. அதற்குள்ளாகவே இவர்கள் மத்திய அரசு நம்மை வஞ்சிக்கிறது என்று கூறி மக்களை ஏமாற்ற தொடங்கி இருக்கிறார்கள்.
ஆனால் இவர்கள் ஆட்சியில் தான் கொலைகள், கொள்ளைகள், சுரண்டல்கள் போன்றவை நடந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் தொகுதி மறு வரை என தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று கூறி பொய்யான பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். உண்மை அதுவல்ல, அதனால் இந்த பாரத மண்ணில் இருந்து திராவிட முன்னேற்ற கழகம் ஒழிக்கப்பட வேண்டும். செங்கோலின் ஆட்சி தமிழகத்திற்கு வர வேண்டும், கொடுங்கோல் ஸ்டாலினை ஆட்சி தமிழகத்திலிருந்து துடைத் தெறியப்பட வேண்டும், என்பதற்காக பாரதிய ஜனதா கட்சி, தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருமே கருப்பு உடை அணிந்து, கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறோம் என்று தெரிவித்து இருக்கிறார்.