சிறிது நேர போராட்டத்திற்குப் பின் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.மின்வாரிய பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. மின்சாரத் துறையினர் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீ அணைக்கப்பட்ட பின் போக்குவரத்து சீரானது.மேலும் கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்பு இதுபோன்ற தீ விபத்துக்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள இது போன்ற மின் கடத்தி பெட்டிகள் உரிய முறையில் மாதம்தோறும் பரிசோதனை செய்து பராமரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
கோவை:சாலையின் அருகே மின்வாரிய மின் கடத்தி பெட்டி தீப்பிடித்து எரிந்ததால் பேருந்துக்காக காத்து இருந்த பயணிகள் அலறி அடித்து ஓட்டம்!!!
March 23, 2025
0
கோவை, ஹோப்ஸ் கல்லூரி சிக்னல் அருகே சாலையின் ஓரத்தில் அமைந்து இருந்த மின்வாரிய பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. கோவை மாநகரப் பல்வேறு பகுதிகளில் டிரான்ஸ்பார்மர் பதிலாக பூமிக்கு அடியில் வயர்கள் பதித்து டிரான்ஸ்பார்மர்களுக்கு பதிலாக புதைவட மின் வயர்கள் மின் கடத்தி பெட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் அவிநாசி சாலை ஹோப் கல்லூரி பெட்ரோல் பங்க் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அருகே இருந்த ஒரு பெட்டியில் இன்று திடீரென புகை வந்து உள்ளது. இதனால் பேருந்துக்காக காத்து இருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் அது தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இது குறித்து பீளமேடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பு அருகே இருந்த கடையில் இருந்து தீயணைப்பான் கருவியைக் கொண்டு அங்கிருந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு, அதனை உடனடியாக அந்தத் தீ மேலும் பரவாமல் அனைத்தனர்.