வேலூர்:பேரணாம்பட்டு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்!!!
March 26, 2025
0
பேரணாம்பட்டு ஒன்றிய அதிமுக சார்பில் மசிகம் கிராமத்தில். நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு ஒன்றிய அதிமுக செயலாளரும், முன்னாள் ஒன்றிய குழு பெருந் தலைவருமான பொகளூர் டி. பிரபாகரன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஊராட்சிகள் வாரியாக பூத் கமிட்டி ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டனர். இதில் வேலூர் புறநகர் மாவட்ட அ திமுக செயலாளர் த. வேலழகன் சிறப்புரையாற்றினார். இதில் கஸ்பா எஸ். மூர்த்தி, நகர அதிமுக செயலாளர் வழக்கறிஞர் எல். சீனிவாசன், மசிகம் கே. ஜெகதீசன், மா. பி.ஜெ. இன்பரசன், ஒன்றிய அ திமுக துணைச்செயலாளர் ஜி.பரிதா, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் எஸ். ஜெயந்தி சேகர், அரிதரன் மற்றும் இ. பிரபாகரன், ஏ. தசரதன், எம். ரவி, பெயின்டர் மோகன் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.