சுற்றுலா தளங்களில் ஒன்றான ஊட்டியில் கோடைவிழா கொண்டாடப்படும்தேதி, மற்றும் இடங்களை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு அறிவித்தார் அதன் படி மே 3,4, ஆகிய இரு நாட்களில் கோத்தகிரி நேரு பூங்காவில் 13வது காய்கறி கண்காட்சி நடைபெறும்.மே 9,10,11,ஆகிய மூன்று நாட்கள் கூடலூரில் 11 வது வாசனை திரவிய கண்காட்சி நடைபெறும்.உதகை அரசு ரோஜா பூங்காவில் மே 10,11,12ஆகிய மூன்று நாட்கள் 20ஆவது ரோஜா மலர்கண்காட்சி நடைபெறும்.மே 23,24,25, ஆகிய மூன்று நாட்கள் குன்னூர் கோத்தகிரி செல்லும் வழியில் அமைந்துள்ள சிம்ஸ் பூங்காவில் 65 ஆவது பழக்கண்காட்சி நடைபெறும்.கோடைவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரும் வழியில் காட்டேரி பஸ்நிறுத்தம் மூன்று கிலோ மீட்டர் முன்பு அமைந்துள்ள காட்டேரி பூங்காவில் மே30, ஜீன்1 ஆகிய நாட்கள் மலைபயிர்கண்காட்சி நடைபெறும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோடை விடுமுறையில் மலர் கண்காட்சி தேதி அறிவிப்பு!!!
March 18, 2025
0