நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் மேகநாதன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பொன்னரசு, இளைஞரணி அரவிந்த், முன்னாள் கவுன்சிலர் மோகன்லால், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், ஸ்டீபன் சத்யராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், அந்தோணி, சண்முக ராம், மாவட்ட மாணவரணி முன்னாள் துணை அமைப்பாளர் தினேஷ் பாண்டியன் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் பொன் மோகன்ராஜ், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் செல்வன், காங்கிரஸ் கமிட்டி லெனின் இயேசு, ராஜா மகேஷ் ,கருப்பு சித்தன், சோனா மகேஷ் ,சிவா ஸ்டீபன், ஜோசப், மனுவேல்ராஜ், லிவிங்ஸ்டன், காசிப் பாண்டி, இளைஞரணி அசோக், அருணாசலம் வழக்கறிஞர் பெர்வின் ராம், முருகேசன், ஆறுமுகராஜ், ரோட்டரி கிளப் சரவணன், வியாபாரி சங்கம் செல்வம், திரவியம், ரோட்டரி செல்வம் இளைஞரணி அசோக் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மேலும் அரசு தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊழியர்களாக தேர்வு பெற்ற நபர்களுக்கும் பொருனை இலக்கிய மன்ற விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் வாசகர் வட்ட பொருளாளர் வெட்டும் பெருமாள் நன்றி கூறினார்.
தென்காசி:ஆலங்குளத்தில் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா!!!
3/19/2025
0
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நூலக வாசகர் வட்டம் சார்பாக போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்ந்த 9 சாதனையாளர்களுக்கும் பொருனை இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற ஆலங்குளம் அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகளுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் தங்க செல்வம் தலைமை தாங்கினார்.மாவட்ட நூலக அலுவலர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.ஆலங்குளம் பொது நூலக நூலகர் பழனிஸ்வரன் வரவேற்று பேசினார்வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் கேடயம் வழங்கி முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன் வாழ்த்தி பேசினார்.நிகழ்ச்சியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் ஷீலா, ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன், பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், மனவளக்கலை மன்ற பேராசிரியர் புலவர் சிவஞானம், மனோன்மணியம் கல்வி நிறுவனம் குழுவினுடைய தலைவர் ஆதித்தன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
