இந்நிலையில் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி இன்று அந்த தொழிலாளர்கள் சிஐடியு நிர்வாகிகளுடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் உடனடியாக தங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம், போனஸ் நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும் அதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.இது குறித்து பேசிய பஞ்சாலைத் தொழிலாளர் சங்க
கோவை மாவட்ட துணை தலைவர் ராமகிருஷ்ணன், அந்த நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு சட்ட சலுகைகள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை எனவும் எனவே மாவட்ட ஆட்சியர் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு தீர்வு காணாவிட்டால் போராட்டத்தை மேலும் வலுப்படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.