திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் இரா.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது.. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கர்ப்பிணி பெண்களை வாழ்த்தினார். இதில் கோட்டாட்சியர், மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு ,ஒன்றிய செயலாளர் பி.வெங்கடேசன் , கோ.குமரபாண்டியன், அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, அந்த துறை சார்ந்த அதிகாரிகள், ஒன்றிய குழு பெருந்தலைவர் சி.பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமேனன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
வேலூர்:சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!!!
3/04/2025
0
