கோவை:டாஸ்மார்க் ஊழல் மூன்று வகையாக உள்ளது என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பட்டியலிட்டுள்ளார்!!!

sen reporter
0



கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்
அரசு மீதே அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது எனவும் அது என்னவென்று பாஜக மாநில தலைவர் ஏற்கனவே தெரிவித்துவிட்டார் என தெரிவித்தார். டாஸ்மாக் ஊழல் மூன்று வகையாக உள்ளது என கூறிய அவர்
பாட்டில் transport, Itself அளவு, தயாரிப்பு ஆலை என மூன்று விஷயங்களை பட்டியலிட்டார்.மேலும் இதில் அரசியல் வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளார்கள்
எனவும் ஊழல் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் அமலாக்க துறையால் தற்போது வெளிவரப்பட்டுள்ளது ஊழல் மதிப்பை குத்துமதிப்பாக தான் தெரிவித்திருக்கிறார்கள் என்றார்.

செந்தில்பாலாஜி சட்டப்படி சந்திப்போம் என கூறியிருக்கிறார்
என்பதை சுட்டிக் காட்டிய அவர் இதற்கு முன்பு அதிமுகவில் இருக்கும் போதும் இதை தான் செந்தில்பாலாஜி கூறினார் என்றார்.திமுக தற்போது வசமாக சிக்கி கொண்டுள்ளதாகவும் விமர்சித்தார்.மதுவிலக்கு கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், குடிமகன்கள் சாராயத்தில் கலப்படம் செய்கிறார்கள் என்று கூறுகிறார்கள் வேறு பொருளில் கலப்படம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார். டாஸ்மாக்கில்
பகல், இரவு, நடுனிசி, அதிகாலை கொள்ளை மதுவில் நடைபெற்று கொண்டிருக்கிறது என்றார். அமலாக்கத்துறை சோதனை இன்னும் பல்வேறு அரசு ஊழல்களை அம்பலப்படுத்தும் என நம்புவதாக தெரிவித்தார்.

ரூபாய் சிம்பலை தயாரித்தவர்  திமுக தாழ்த்தப்பட்ட பிரிவில் இருந்து வெற்றி பெற்றவர் எனவும்
அவர் உருவாக்கிய சிம்பலை தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு பட்ஜெட் குறித்தான கேள்வி- இன்றைய தலைப்பு டாஸ்மாக் ஊழல் மட்டுமே அதனை தாண்டி பேசுவதற்கு தயாராக இல்லை என பதில் அளித்தார். 
அமலாக்கத்துறை விசாரணையை சட்டப்படி சந்திப்போம் என்று கூறினால் சட்டப்படி தான் நீங்கள்(செந்தில்பாலாஜி) உள்ளே செல்ல போகிறீர்கள் என தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top