தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மகளிர் தினத்தை முன்னிட்டு சங்கை சிங்கப்பெண்கள் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ரவி நர்ஸிங் இன்ஸ்டிடியூட் மற்றும் ரவி மருத்துவமனை டாக்டர் கவிதா, டாக்டர் நாகபிரியதர்ஷினி ஆகியோர் சார்பில்" புற்றுநோய் விழிப்புணர்வு மைம் நாடகமும், உரையாடலும்" நடைபெற்றது. டாக்டர் அகிலாண்ட பாரதி "மகளிரும் மருத்துவமும்" என்ற பெயரில் சிறப்புரை ஆற்றினார். இதனை தொடர்ந்து மகளிரின் தனிப்பட்ட உடல் பிரச்சனைகள் தொடர்பான சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக கலந்துரையாடல் நடைபெற்றது. விழாவில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த தலைமுறைப் பெண்கள் மற்றும் சாதனை புரிந்த சையத் அலி, ஜெயலட்சுமி, அழகு நாச்சியார் ஆகியோர் கௌரவிக்கப்பட்டார்.பெண்களே பெண்களுக்காகத் துவங்கியிருக்கும் இந்த அமைப்பின் வாயிலாக பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றும் அனைத்துப் பெண்களின் பங்களிப்புடன் தீர்மானிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் கலந்துகொண்ட அனைத்து பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சி ஏற்பாடுகளை வசந்தம் கிளினிக் டாக்டர் விஜயலட்சுமி மற்றும் புரன்ஸோ இயற்கைப் பொருட்கள் நிறுவனர் செல்வி இந்திரா ராமநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.
தென்காசி:சங்கரன்கோவிலில் சங்கை சிங்கப்பெண்கள் சங்கமம் நிகழ்ச்சி!!!
March 19, 2025
0