வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், மெட்டுக்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்!!!
3/29/2025
0
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், மெட்டுக்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் முற்பகல் 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடந்தது. கூட்டத்துக்கு மெட்டுக்குளம் ஊராட்சி மன்ற தலைவி அனிதா இளங்கோவன் தலைமை வகித்தார். துணைத்தலைவி சௌமியா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் சரவணன் தீர்மானங்களை வாசித்தார் .ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கார்மேல், சியாமளா, ஜெயலட்சுமி, காயத்ரி, பிலோமினா, சிவக்குமார், சூர்யராஜ், பக்தவச்சலம் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கிராம சபை கூட்டத்தை சிறப்பித்தனர். கிராம சபை கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அனைத்து பொதுமக்களுக்கும் உலக தண்ணீர் தினத்தின் அவசியம் குறித்து விரிவாக விளக்கி கூறப்பட்டது. இதை தொடர்ந்து பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து அனைவருக்கும் தேநீர் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.
