உலக மகளிர் தினம் 08/03/2025 அன்று YMCA மற்றும் பாவேந்தர் இலக்கிய பேரவை சார்பாக YMCA நிலா மாட அரங்கில் கொண்டாடப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்விற்கு பிறகு YMCA செயலாளர் திரு. மேக்ஸ் வில்லியர்ட் ஜெயபிரகாஷ் வரவேற்புரை வழங்கினார்.
வரவேற்புரைக்கு பிறகு ஆசிரியை செல்வி. ரம்யா அவர்கள் தலைமையில் மகளிர் தின கவியரங்கம் அரங்கேறியது. கவியரங்கில் இனியொரு விதி செய்வோம், எல்லாம் சக்திமயம், தாயாய் சேயாய் மற்றும் பொறுமையின் சிகரம் பெண் என்ற தலைமையில் கவிதைகள் வாசிக்கப்பட்டன.
கவியரங்கிற்கு பிறகு பாவேந்தர் இலக்கிய பேரவை தலைவர் திரு. ஜனார்தனன் பேசுகையில் நாட்டின் சரிபாதி மக்கள் தொகையில் பெண்கள் இருக்கும்போது சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் ஆகியும் மகளிர் இட ஒதுக்கீடு 39% சட்டம் நிறைவேறாதது கவலைக்குரியது என்றார். பள்ளி மாணவ, மாணவிகளின் குழுப்பாடல் போட்டிகள் நடைப்பெற்றன.
மேலும் பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில் பழமரக் கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியை கலை ஆசிரியை திருமதி. முனீசுவரி அவர்கள் தொகுத்து வழங்கினார். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியைகள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்
YMCA பொருளாளர் திரு. தனசிங் இஸ்ரேல், YMCA உறுப்பினர் திரு. ஸ்டீபன் சந்தோஷ் குமார், பள்ளியின் ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் பங்கேற்று நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியை எப்சிபா வாழ்த்துரை வழங்கினார்.
மாணவி பொன் அருண்ய சிவன்யா நன்றியுரை நவில நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.
