பள்ளி குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளை அவ்வூர் தொடக்கப் பள்ளி ஆசிரியர் திரு. நல்லமுத்து அவர்கள் கதை மற்றும் பாடல்களை விளக்கி எடுத்துரைத்து மகிழ்வித்தார்.
பாரதி புத்தகாலயம் சார்பாக குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு, அதை திரு. சதாசிவம் அவர்கள் திறந்து வைத்தார். மேலும், கவிஞர். ரமேஷ்ராஜா வாழ்த்துரை வழங்கினார். குழந்தை இலக்கியம் தொடர்பான அவசியம் குறித்து திரு. ஜனார்தனன் எடுத்துரைத்தார்.
நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு தலைமை ஆசிரியை எப்சிபா அவர்கள் பரிசு பொருட்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
முன்னதாக திரு. ரெனோ அவர்களின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
வருங்காலங்களில் இந்த நிகழ்ச்சியை அனைத்து பள்ளிகளையும் இணைத்து சிறப்பாக நடத்தப்படுவதாக YMCA பொருளாளர் திரு. தனசிங் இஸ்ரேல் தனது உரையில் தெரிவித்தார்.
நிகழ்ச்சியை கலை ஆசிரியை திருமதி. முனீசுவரி தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் YMCA உறுப்பினர் திரு. ஸ்டீபன் சந்தோஷ் குமார், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கு பெற்றனர்.
நிகழ்ச்சியின் முடிவில் ஓவிய ஆசிரியை திருமதி. செலீனா நன்றி நவில நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.