கோவையின் முக்கிய பகுதியான ராமநாதபுரத்தில் அதிநவீன சொகுசு வசதிகளுடன் கூடிய ரூ.100 கோடி மதிப்பிலான ‘ஜி ஸ்கொயர் உட்லேண்ட்’ பிரீமியம் டவுன்ஷிப்: ஜி ஸ்கொயர் அறிமுகம்!!!

sen reporter
0

இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்ட வீட்டு மனைகள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய வீடு ஆகியவற்றை வாங்க விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது உடனடியாக வீடு கட்டி குடியேறும் வகையில் அனைத்து வசதிகளையும் கொண்ட ‘ஜி ஸ்கொயர் உட்லேண்ட்’ என்னும் புதிய திட்டத்தை கோவை ராமநாதபுரத்தில் சென்ட்ரல் ஸ்டூடியோ பின்புறம் அறிமுகம் செய்துள்ளது. ரூ.100 கோடி மதிப்பிலான

 இந்த குடியிருப்பு டவுன்ஷிப்பில் 1.5 சென்ட் முதல் 5 சென்ட் வரையிலான 100க்கும் மேற்பட்ட மிகவும் கவனமாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வீட்டு மனைகள் உள்ளன. கோயம்புத்தூரில் உள்ள ராமநாதபுரத்தில் ஒரு சென்ட் விலை தற்போது ரூ.25 லட்சமாக உள்ளது, அதே நேரத்தில் ஜி ஸ்கொயர் ஒரு சென்ட் நிலத்திற்க்கு ₹21.9 லட்சம் கவர்ச்சிகரமான விலையில் மனைகளை வழங்குகிறது. திருச்சி சாலையில் இருந்து ஒரு நிமிட தூரத்தில் அமைந்துள்ள இந்த டவுன்ஷிப், கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம், ரெயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகியவற்றிற்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை கொண்டு இருப்பதோடு சிறப்பான சாலை வசதிகளையும் கொண்டுள்ளது. இதன் அருகே பிஎஸ்ஜி டெக் மற்றும் பிற முன்னணி கல்வி நிறுவனங்களும், முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் உள்ளன. மேலும் புகழ்பெற்ற பிஎஸ்ஜி மருத்துவமனை மற்றும் கேஎம்சிஎச் போன்ற மருத்துவமனைகளும், ஷாப்பிங் மால்கள், பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவையும் அருகில் உள்ளன.

கோவை ரெயில் நிலையம், உக்கடம் மேம்பாலம் ஆகியவற்றிற்கு 5 நிமிட தூரத்தில் அருகாமையிலும், ரேஸ்கோர்ஸ், லுலு ஹைப்பர் மார்க்கெட், லட்சுமி மில்ஸ் ஆகிய பகுதிகளுக்கு எளிதாக செல்லும் வகையிலும் அமைந்து உள்ளன. கிருஷ்ணசாமி நகர், கிருஷ்ணா காலனி, ஜிவி ரெசிடென்சி, ராஜீவ் காந்தி நகர் போன்ற இதன் அருகே 2 கி.மீ.க்குள் உள்ள பகுதிகளில் 1 சென்ட் விலை சுமார் ரூ.40 லட்சமாகும். ஆனால் அவற்றுடன் ஒப்பிடும்போது, ​​ஜி ஸ்கொயர் உட்லேண்ட்டில் 1 சென்ட் விலை மிகவும் குறைவாகும். ஜி ஸ்கொயர் உட்லேண்ட்டில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைய உள்ளது.இந்த டவுன்ஷிப்பைச் சுற்றி கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பிரபல மருத்துவமனைகள் என அனைத்தும் உள்ளன. கட்டுமானத் துறையில் வேகமாக வளர்ச்சி கண்டு வரும் கோவை நகரில் இந்த இடம் சிறப்பானதொரு மதிப்பைக் கொண்டுள்ளது. இது அமைதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிப்பதோடு, உங்கள் முதலீட்டிற்கும் நம்பிக்கையான சிறந்த பலனை அளிக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top